ஹட்டன் ஹைலணட்ஸ் கல்லூரி நடாத்தும் அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான தேசிய வாசிப்பு மாத கட்டுரைப் போட்டி – 2022
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தினை விருத்தி செய்யும் நோக்கில் “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக, ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியினால் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டுரைக்கான தலைப்புகள்
01. “அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வி” – சவால்களும் சாத்தியங்களும்
02. நிகழ்கால பாடசாலை நூலகங்களும் மாணவர்களின் எதிர்பார்ப்பும்
03. மாணவர்களின் ஆளுமை விருத்தியில் நூல்களின் முக்கியத்துவம்
04. மாணவர்களின் தகவல் தேவைகளும் தற்காலத்தில் அதற்கான வாய்ப்புக்களும்
போட்டி விதிகள்
• இந்தப் போட்டி நிகழ்ச்சியானது, தேசிய மட்ட மற்றும் திறந்த போட்டியாக நடாத்தப்படுகிறது.
• போட்டியாளர் இலங்கை அரச பாடசாலை ஒன்றில் தற்போது கல்வி கற்பவராக இருத்தல் வேண்டும்.
• முதல் மூன்று (3) வெற்றியாளர்களுக்கு சிறப்புப்பரிசில்களும், முதல் பதினைந்து (15) வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படும்.
• கொடுக்கப்பட்ட 4 தலைப்புகளில் ஒன்றை தெரிவு செய்து எழுத வேண்டும்.
• ஆக்கம் நியமத் தமிழில் அமைவதுடன், கையெழுத்து அல்லது கணினி பதிப்பாக இருத்தல் வேண்டும்.
• கட்டுரையாக்கம் 500-600 சொற்களுக்குள் எழுதப்படல் வேண்டும்.
• ஆக்கமானது, போட்டியாளரின் சொந்த ஆக்கம் என பாடசாலை அதிபரினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
• மேலும், தபால் உறையில் “வாசிப்பு மாத கட்டுரைப்போட்டி – 2022” என தலைப்பிடல் வேண்டும்.
• முடிவுத் திகதிக்கு (2022.10.25) முன்னர், பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
• ஆக்கத்தின் முதல் பக்கத்தில், மாணவரின் முழுப்பெயர், தரம் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள், பாடசாலை முகவரி, ஆகியன தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
• புள்ளி வழங்கும்போது ஆய்வுப்பார்வை மற்றும் தேடல் ஆகியன கருத்திற் கொள்ளப்படும்.
• மேலுள்ள விதிகளைப் பின்பற்றாத ஆக்கங்கள் நிராகரிக்கப்படும்.
• நடுவர் குழுவினுடைய தீர்ப்பே இறுதியானதாகும்.
• ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி
நூலகப் பொறுப்பாசிரியர்,
ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரி,
ஹட்டன்.
மேலதிக தொடர்புகளுக்கு:
0778914366, 0718396796