Electricity Tariffs Increase? – Full Details Tamil

Polish 20230911 091137153

மின்சாரக் கட்டணத்தை 56 வீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணையகத்தின் விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் எந்த வித கோரிக்கையும் எமக்குக் கிடைக்கவில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத்தை 56 சதவீதத்தால் அதிகரிக்கும்படி, இலங்கை மின்சார சபை (CEB) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆயினும், இது குறித்த எந்தவொரு கோரிக்கையும் இதுவரையில் தமக்குக் கிடைக்கவில்லை என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 3‌ ஆம் திகதி 14.2% மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு, அதற்கு முன்னர் 70% மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டுமாயின், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் தேவை என்றும், அதேநேரம் வருடத்திற்கு 02 முறை மாத்திரமே மின்சாரக் கட்டணத்தைத் திருத்த முடியும் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.