Death of Student

Child

 

சாதனைச் சிறுமியை சாவு தழுவிக் கொண்டது!
கடந்த 2020 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் போது மாத்தறை, ரத்மலே பிரதேசத்தைச் சேர்ந்த தெவ்மி ரன்சரா, இரு கால்களும் ஊனமுற்ற நிலையில், இரு கைகளும் சரிவர செயற்படாத நிலையிலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி 9 பாடங்களிலும் A சித்தி பெற்றார்.
கணிதப் பிரிவில் உயர்தரம் கற்கும் ஆசையை அவர் கொண்டிருந்த போதிலும், உடல்நிலையினைக் கருத்திற் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
நடக்க முடியாத அவரை காலையில் பாடசாலைக்கும், மாலையில் வீட்டுக்கும் சுமந்து கொண்டு செல்வது அவரின் பெற்றோருக்கு சுகமான சுமையாகவே இருந்தது. எழுதும் போது, இன்னொருவர்  பேனையின் மூடியைக் கழற்றியே, அவரது கையில் பேனையைக் கொடுக்க வேண்டும். கொப்பியில் ஒரு பக்கத்தை எழுதி முடித்தால், மறுபக்கத்தை இன்னொருவர் தான் புரட்டிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது உயர்தரக் கல்வியை விடா முயற்சியுடனும், மன உறுதியுடனும் கற்றுக் கொண்டிருந்த அந்த சாதனைச் சிறுமி, இன்று இவ்வுலகில் இருந்தே விடைபெற்று விட்டார். காய்ச்சல் மூலம் வந்த காலன், அவளை அழைத்துச் சென்றே விட்டான்.
சென்று வா மகளே…
ஆழ்ந்த இரங்கல்கள்!
சின்ன தேவதையே!

WhatsApp Group: Click here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *