Cabinet Decision – Tamil Details

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பீடங்களாக தரமுயர்த்துவதன் மூலம் கல்வியியல் பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில், தற்போது நடைமுறையிலுள்ள கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதற்காக, கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக, மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த நிபுணத்துவக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தற்போதுள்ள 20 கல்வியியல் கல்லூரிகளில் 19 கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகமாக உயர்த்துவதற்கும், அத்துடன் இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கும் அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், ஏதுவான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கான புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Cabinet Decision