இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம், அவுஸ்திரேலியா விருதுகள் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 30.04.2024 அன்றுடன் முடிவடைகின்றது.
அவுஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகை என்பது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையால் நிதியளிக்கப்படும் நீண்டகால செயற்திட்டமாகும்.
ஆய்வு மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள், மாற்றத்தை உண்டாக்குவதற்கும் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் தனிநபர்களின் திறன்களையும் அறிவையும் மேம்படுத்த இதன் மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அவுஸ்திரேலியா விருதுகள் உதவித்தொகை வளர்ந்து வரும் தலைவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் குறிப்பிட்ட துறைகளில் முழுநேர முதுகலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
தெற்காசியா மற்றும் மங்கோலியா திட்டத்தின் கீழ், இலங்கை, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், மங்கோலியா நாட்டினர் இதற்கென விண்ணப்பிக்க முடியும். முழு கல்விக் கட்டணம், திரும்பும் விமானக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகளுக்கான பங்களிப்பு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க APPLY ONLINE என்பதை கிளிக் செய்யுங்கள்.
APPLY ONLINE |