நலன்புரி பயனாளிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க “அஸ்வெசும வாரம்” (நவம்பர் 06 – 11 )
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, நவம்பர் 06 முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கொடுப்பனவுகள் வழங்கத் தாமதமான குடும்பங்களுக்கு, இத்திட்டத்தின் ஊடாக உடன் கொடுப்பனவுகளை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகம், நிதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு மற்றும் பிரதேச செயலகங்கள் இணைந்து அஸ்வெசும வாரத்திற்குள், பயனாளிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“அஸ்வெசும பயனாளிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் இந்த வாரத்தில் தீர்க்கப்படவுள்ளன.
அதேவேளை, இது அடுத்த ஆண்டுக்கான விண்ணப்பக் கோரலல்ல. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்ட பின்னரே, அடுத்த ஆண்டுக்கான அஸ்வெசும விண்ணப்பங்கள் கோரப்படும். அத்துடன், ஜூலை முதல் டிசம்பர் வரையான கொடுப்பனவுகளை இந்த ஆண்டு டிசம்பருக்குள் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
Also Read:
அஸ்வெசும பெயர்ப் பட்டியலை பார்வையிட… – Click here
ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான விபரம் – Click here