ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளின் நலப் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், சிறுநீரக நோயாளர்களின் அடிப்படையில் நலன்புரி நன்மைக்குத் தெரிவான தகுதியான நபர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில DS மற்றும் GS அலுவலகங்களில், பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சபை குறிப்பிட்டுள்ளது.
இன்று முதல் நாட்டிலுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் (DS & GS) அலுவலகங்களில் பெயர்ப்பட்டியல் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.