கடந்த வாரம் வெளியிடப்பட்ட அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் பெயர்ப்பட்டியலுக்கு எதிராக, 17,000 க்கு மேற்பட்ட மேன்முறையீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக நலன்கள் தொடர்பான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் வழங்க முடியும்.
online மூலம் அந்த மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நபர்கள் எதிர்வரும், திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1924 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை தெரிவிக்க முடியும்.
மேன்முறையீட்டு விண்ணப்பத்தை பெற Appeal Form என்பதை கிளிக் செய்யுங்கள். ⬇️⬇️⬇️
APPEAL FORM (CLICK HERE) |
Join Our WhatsApp Group: Click here