5000/- Allowance for Government Employees from January 2024?
அரச ஊழியர்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000/- ரூபா சம்பள அதிகரிப்பில் இருந்து 5000/- ரூபாவை எதிர்வரும் 2024 ஜனவரி முதல் வழங்குவது தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
ஓய்வூதியம் பெறுவோருக்கான 2500/- ரூபா அதிகரிப்பை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முழுமையாக வழங்குவது தொடர்பாக அரசு கவனம் செலுத்தியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு 10,000/- ரூபா கொடுப்பனவில் இருந்து 5,000/- ரூபாயை ஜனவரி மாதத்தில் வழங்குவதுடன், மிகுதி சித்திரை முதல் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
▪️சாதாரண பெறுபேறுகள் தொடர்பான விஷேட அறிவிப்பு – Click here