பரிசோதகர் பதவியில் II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026
SRI LANKA CUSTOMS DEPARTMENT
📢 முக்கிய அறிவிப்பு:
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சுங்கப் பரிசோதகர் பதவியில் II ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026 தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிக்கான போட்டிப் பரீட்சைக்கு தகுதியுடைய இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் Online முறையில் மாத்திரம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
📝 விண்ணப்ப காலம்
🟢 விண்ணப்பம் ஆரம்பம்: 14.09.2026 – காலை 9.00 மணி
🔴 விண்ணப்ப முடிவு: 12.10.2026 – இரவு 9.00 மணி
🎯 முக்கிய தகைமைகள்
- இலங்கைப் பிரஜையாக இருத்தல்.
- சிறந்த ஒழுக்கப் பண்புகளைக் கொண்டிருத்தல்.
- விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18 வயதுக்குக் குறையாமலும் 24 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல்.
- ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டிருக்க வேண்டும்.
- ஆண் விண்ணப்பதாரர்களின் மார்பு விரிவடைந்த நிலையில் குறைந்தது 33 அங்குலம் சுற்றளவு இருக்க வேண்டும்.
- பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டிருக்க வேண்டும்.
🎓 கல்வித் தகைமை
- G.C.E. (A/L) பரீட்சையில் ஒரே தடவையில் மூன்று பிரதான பாடங்களிலும் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
- G.C.E. (O/L) பரீட்சையில் தமிழ்/சிங்களம் மற்றும் கணிதம் உள்ளிட்ட 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கில மொழியில் குறைந்தது சாதாரண சித்தி பெற்றிருக்க வேண்டும்.
- O/L சித்திகள் இரண்டு தடவைகளுக்கு மேற்படாத வகையில் பெற்றிருக்க வேண்டும்.
💰 சம்பளம்
ரூ. 49,550 – 7 × 540 – 27 × 670 – ரூ. 71,420
🏛️ நிரந்தரமானதும் ஓய்வூதியத்திற்குரியதுமான பதவி
🏛️ சேவை நிபந்தனைகள்
- நியமனம் பெறுவோர் 3 வருட காலத்திற்கு தகுதிகாண் நிலையில் வைக்கப்படுவர்.
- நாட்டின் எந்தப் பகுதியிலும் சேவையாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
- தேவைக்கேற்ப பகல் மற்றும் இரவு நேரங்களிலும் சேவையாற்ற வேண்டியிருக்கலாம்.
📚 போட்டிப் பரீட்சையின் கட்டமைப்பு
| வினாத்தாள் | புள்ளிகள் | நேரம் |
|---|---|---|
| பொது உளச்சார்பு | 100 | 1 மணி |
| கணிதம் | 100 | 1 மணி |
| ஆங்கில மொழி | 100 | 1½ மணி |
மொத்தம் – 300 புள்ளிகள்
பொது உளச்சார்பு வினாத்தாள் மொழித் தேர்ச்சி மற்றும் தர்க்க ரீதியான சிந்தனைத் திறனை மதிப்பிடும் வகையில் அமையும். கணித வினாத்தாள் கணித அறிவையும், ஆங்கில மொழி வினாத்தாள் வாசிப்பு, எழுத்து, புரிந்துகொள்ளல் மற்றும் தொடர்பாடல் திறன்களையும் மதிப்பிடும்.
✅ குறைந்தபட்ச சித்தி
ஒவ்வொரு வினாத்தாளிலும் குறைந்தது 60% புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துப் பரீட்சையில் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.
💳 பரீட்சைக் கட்டணம்
ரூ. 600.00
கட்டணத்தை Credit Card, Online வசதியுள்ள Debit Card, Bank of Ceylon Online Banking/Flex App அல்லது Bank of Ceylon கிளை மூலம் செலுத்த முடியும்.
📅 பரீட்சை நடைபெறும் காலம்
இப்போட்டிப் பரீட்சை 2026 டிசம்பர் மாதத்தில் நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது.
📌 பரீட்சை நடைபெறும் சரியான திகதி பின்னர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்.
⏰ இறுதி வாய்ப்பு
விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி
12.10.2026
இரவு 9.00 மணி
📌 முக்கிய குறிப்பு: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இறுதித் திகதி வரை காத்திருக்காமல், தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களைத் தயார்படுத்தி Online விண்ணப்பத்தை உரிய காலத்திற்குள் சமர்ப்பிப்பது முக்கியமாகும்.
