2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (A/L) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாத இறுதியில் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் சாதாரண தரப் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்