அரச சேவையை வலுப்படுத்தும் வகையில் 15,921 அத்தியாவசிய ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலாவது அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் 7,456 பேரும், இரண்டாவது அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் 5,882 பேரும், 13,338 மற்றும் 2,218 தாதியர்களும், 304 ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் நேர்முகத் தேர்வுகள் உட்பட 2,583 பேரும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முறையான முறைமையின் கீழ் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், திறைசேரியின் கொள்ளளவை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த வெற்றிடங்களில் பல பட்டதாரிகளுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கல்வித்துறையில் சரியான முறைமையின்படி வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Polish 20250320 172332870
Dinamina 19.03.2025