2026 ஆம் ஆண்டு முதல் அனைத்து அரச பரீட்சைகளும் 6 வருடங்களுக்கு முன்னர் இருந்த அட்டவணையின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர சிலுமின பத்திரிகையிடம் தெரிவித்தார்.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சா/த பரீட்சை டிசம்பரில் நடைபெறும் எனவும், எஞ்சிய அரச பரீட்சைகளும் திட்டமிட்ட அட்டவணையின் பிரகாரம் நடைபெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(மூலம் – சிலுமின 15.03.2025)

Polish 20250315 072048211