பகுதி நேர விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பம் கோரல் 2024 / Call for Applications for Part-Time Lecturers 2024

எமது கல்விக் கல்லூரிக்கு பின்வரும் பாடங்களுக்கான பகுதி நேர விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர்.

தொடர் இலக்கம்பாடங்கள்தேவையான எண்ணிக்கை
1நுண்கலை – Craft and Arts (ACT)01
2மின் இலத்திரனியல் தொழில்நுட்பம் – Electrical and Electronic Technology01
3செயன்முறைத் தொழில்நுட்பம் – PTS01
4நாடகமும் அரங்கியலும் – Drama and Theater01

தேவையான தகைமைகள்

1. விண்ணப்பதாரி இலங்கை. ஆசிரியர் சேவை/இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை/ இலங்கை அதிபர் சேவை / இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை / இலங்கை கல்வி நிருவாக சேவை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சேவையைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

2. மேற் குறிப்பிடப்பட்ட ஏதேனும் ஒரு சேவையிலிருந்து ஓய்வுபெற்றவராக இருப்பின் 65 வயதுக்குட்பட்ட சிறந்த தேகாரோக்கியமுடையவராக இருத்தல் வேண்டும்.

3. அரச அங்கீகார நிறுவத்தினால் பெறப்பட்ட / அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய துறைசார் சான்றிதழ்கள் இருத்தல் வேண்டும்.

தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 13.09.2024 திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ கீழ் வழங்கப்பட்டுள்ள லிங்க் இணை பயன்படுத்தி பதிவேற்றம் செய்யவும். தங்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 25.09.2024 ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெறும். நேர்முகப் பரீட்சை மூலம் தகுதியுடைய பகுதி நேர விரிவுரையாளர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

நேர்முகப் பரீட்சைக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளோ/கடமை விடுமுறையோ வழங்கப்படமாட்டாது. அத்துடன் தாங்கள் பகுதி நேர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்பதை கவனத்திற்கொள்ளவும்.

பீடாதிபதி
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி