2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தும் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

அதன்பின், மூன்றாம் தவணைக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் 05 ஆம் திகதி (திங்கட்கிழமை) மீள தொடங்கவுள்ளது. மூன்றாம் தவணையின், முதல் கட்டம் டிசம்பர் 5 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

அதன்பின்னர், டிசம்பர் 23 ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரை பாடசாலைகளுக்கு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணையின் மீதிக் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி – 02 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.