கிராம உத்தியோகத்தர் பரீட்சை இந்த வாரம் மார்ச் 13, 14, 15 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. அதற்கான கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில், இந்நேர்முகப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
மேலும், நேர்முகப் பரீட்சைக்கான உரிய தகைமைகளைப் பெற்றும், இதுவரை அழைப்புக் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்கள் www.moha.gov.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்திலிருந்து, தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நேர்முகப்பரீட்சைக்கு கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் தொடர்பில், இணையத்தளத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பொது நிர்வாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நேர்முகப் பரீட்சையில் 4,232 பேர் பங்கேற்கவுள்ளனர். நேர்முகப் பரீட்சையின் பின்னர் வெற்றிடங்கள் மிக விரைவாக நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GS Interview Name List & Marks Allocation | Click here |