வீட்டிற்கு ஒரு விமானம் வைத்திருக்கும் கிராமம் எது தெரியுமா?
இக்கிராமத்தில் வெளியே செல்லவும், வேலைக்குச் செல்லவும் விமானத்தில் தான் பயணிக்கின்றார்களாம்!
முற்காலத்தில் ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல கால்நடையாகவும், மாட்டு வண்டிகள் மற்றும் குதிரைகள் மூலமாகவும் சென்று வந்தனர்.
அதுவே நாளடைவில் பொதுப் போக்குவரத்து, சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் என்று விருத்தியடைந்தது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி, அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் விமானங்களையே போக்குவரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இக்கிராமம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. அக்கிராமத்தின் பெயர் கேமரூன் ஏர்பார்க்.
இக்கிராமவாசிகளே வீட்டுக்கு வீடு ஒரு விமானம் என்று சொந்தமாக விமானத்தை வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகவலானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை.
இக்கிராமவாசிகள் நீண்ட காலமாக விமானங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர்.
சொந்த வேலை மற்றும் வியாபார நோக்கம் என பல்வேறு காரணங்களுக்காக, இங்குள்ள கிராமவாசிகள் ஆடம்பர விமானங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு கிராமம் முழுவதும் இவ்வளவு விமானங்கள் இருந்தால், எப்படி அந்த சாலையில் போவது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்.
ஆனால், கவலைப்பட வேண்டாம். அங்கு மிகவும் அகலமான சாலைகள் உள்ளன.
எவ்வளவு அகலம் என்றால், இக்கிராமத்தில் உள்ள ஒருவர் தனது அண்டைய வீட்டுக்காரரிடம் பேசவேண்டுமென்றால், ஒலிபெருக்கி (ஸ்பீக்கர்) தான் உபயோகிக்க வேண்டியிருக்கும். அவ்வளவுக்கு தூரம் தூரமாக வீடுகள் காணப்படும்.
இங்குள்ள வீதிகளுக்குக் கூட விமானங்களின் பெயர்கள் தான் சூட்டப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக “போயிங் வீதி” என்பது அங்கு காணப்படும் ஒரு வீதியின் பெயர்.
இது போன்ற பல்வேறு பொதுஅறிவுகளை அறிந்து கொள்ள எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள். – Click here (Join WhatsApp Group)