Graduate Teacher Appointment 2024 – Update

கணிதம், இரசாயனவியல், பௌதீகம், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சுமார் 2500 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டிய தம்மிஸ்ஸர வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மூன்று மாடி தொழில்நுட்ப கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி முதற்கட்டமாக ஒகஸ்ட் -செப்டம்பர் மாதத்திற்குள் 2500 அதிநவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் அனைத்து முன்னணி பாடசாலைகளுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அத்துடன் மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து பாடசாலைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் ஆசிரியர்கள் இதற்குத் தயாராக வேண்டும் எனவும், ஆசிரியர் பயிற்சி தொடர்பான ஆசிரியர் கையேடு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பச் சுற்றில் 7500 ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Join Master WhatsApp Group – Click here