முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவி ஆட்சேர்ப்புக்கு 2,170 பேர் தகுதி!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவி ஆட்சேர்ப்புக்கு 2,170 பேர் தகுதி!

IMG 20250808 WA0000

இலங்கை அரசாங்க சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் வேலைத் திட்டத்துக்கமைய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பதவி வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 2,170 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தச் சேவையில் மூன்றாம் தரத்துக்கு ஆட்சேர்ப்பதற்கான பரீட்சைகள், பரீட்சை ஆணையாளரினால் கடந்த மே மாதம் பதினெட்டாம் திகதி நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் இருபத்தைந்து மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட மட்டத்தில் கூடிய புள்ளிகள் மற்றும் நிலை பிரகாரம் இரண்டாயிரத்து நூற்றி எழுபது பேர் நேர்முகப் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை இம்மாதம் 22,23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மூன்று தினங்கள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள பொது நிருவாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

இந்த அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவிக்கான பரீட்சையில் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து 12 சிறுபான்மையினர் உள்ளிட்ட 613 பரீட்சார்த்திகள் நேர்முகப் பரீட்சைக்கு தகைமை பெற்றுள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு 08, கம்பஹா 02, களுத்துறை 02 என்ற ரீதியாக பன்னிரண்டு சிறுபான்மையினர் மாத்திரமே நேர்முகப் பரீட்சைக்கு தகைமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

MSO கடந்த கால மற்றும் மாதிரி வினாத்தாள் வழிகாட்டல் களைப்  பெற எமது வட்ஸ்அப் குழுவில் இணையுங்கள் —-> Click here (Join Now)