முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பரீட்சை அப்டேட் – 2025

7 ஆண்டுகளுக்குப் பின்னர் அரச சேவையில் முகாமைத்துவ உத்தியோகத்தர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மே மாதத்தில் இதற்கான திறந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருந்த போட்டிப் பரீட்சைக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த பரீட்சை நடத்தப்படவுள்ளது.

இதற்காக 1 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 2200 பேர் அரச சேவையில் இணைக்கப்பட உள்ளனர்.

தற்போது முகாமைத்துவ அதிகாரிகளுக்கான 4,000 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் உள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இறுதியாக நிர்வாக அதிகாரிகள் பொது சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆண்டு 2018 என்பது குறிப்பிடத்தக்கது.

Note – எமது MSO பரீட்சை வழிகாட்டல் வகுப்புகளில் இணைந்து கொள்ள – Click here (WhatsApp Group)