B.Ed பட்டதாரிகளை மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில், ஆசிரியர் வெற்றிடங்களுக்கு இப்பட்டதாரிகள் ஆட்சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளின் வரம்பிற்குள், ஆட்சேர்ப்புகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லாமையால் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இலங்கை ஆசிரியர் சேவையின் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு B.Ed பட்டதாரிகளின் ஆட்சேர்ப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Approval has been granted for the recruitment of B. Ed. Graduates for teacher vacancies exist in Southern, Sabaragamuwa, North Central, Western, North Western & Northern Provinces subjected to manage within the limit of financial provisions allocated for year 2023.
It added approval has not been granted for the recruitment of B. Ed. Graduates to teacher vacancies of the Sri Lanka Teachers’ Service in Eastern, Uva & Central provinces due to financial provisions allocated for year 2023 being inadequate.
WhatsApp Group | Join Now |