27 ஆம் திகதி வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் மகா சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக மார்ச் மாதம் முதலாம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடைபெறும் என்றும் ஆளுநர் அறிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group – Click here