திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வாங்குவோருக்கு பணப் பரிசு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
T56 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரை கைது செய்வதற்குத் தேவையான தகவலை வழங்கும் ஒருவருக்கு ரூ.5 இலட்சமும், வேறு பல வகைப்பாடுகளுக்கு உட்பட்ட பண வெகுமதிகளையும் வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதார்.