CERTIFICATE COURSES IN CHINESE LANGUAGE
கொழும்புப் பல்கலைக்கழகம்
Colombo University – Faculty of Arts (Confucius institute)
• பின்வரும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஆரம்பநிலை மட்டம் (Primary Level)
- Certificate in Chinese Language for Beginners
- Certificate in Spoken Chinese Language for Beginners
- Certificate in Elementary Chinese Language
இடைநிலை மட்டம் (Intermediate Level)
- Certificate in Intermediate Chinese Language – I
- Certificate in Intermediate Chinese Language – II
- Certificate in Intermediate Spoken Chinese Language
உயர்நிலை மட்டம் (Advanced Level)
- Certificate in Advanced Chinese Language
கற்கைநெறி கட்டணம்:
- ஆரம்ப நிலை – ரூபா. 20,000/-
- இடை நிலை – ரூபா. 25,000/-
- உயர் நிலை – ரூபா. 25,000/-
கற்கைநெறி பற்றிய தகவல்கள்
- கற்கை நெறி ஆரம்பம்: நவம்பர் – 2022
- கற்கைநெறி ஊடகம்: ஆங்கிலம்
- காலம்: 60 மணித்தியாலங்கள்
- கற்கைநெறி வகை: நிகழ்நிலை (Online)
- விண்ணப்பக் கட்டணம்: ரூபா. 1000/-
- விண்ணப்ப முடிவுத்திகதி: 30.08.2022
- பரீட்சை: 30.10.2022
எவ்வாறு விண்ணப்பிப்பது:
ஒன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்க.
CLICK HERE
மேலதிக விபரங்களுக்கு:
மின்னஞ்சல் முகவரி: info@ciuc.cmb.ac.lk
தொலைபேசி இலக்கம்: 0112599869
(திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்)
பதிவாளர், கொழும்புப் பல்கலைக்கழகம்.
சீன மொழி கற்பதன் முக்கியத்துவம்
தற்போது நீங்கள் சிறந்த ஆசிரியர்களினூடாக சீன மொழியைக் கற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை கொழும்புப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்த மொழியைக் கற்று அதன் சிறந்த பயனைப் பெற்றிடுங்கள்.
சீன மொழியைக் கற்பதன் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று, பொருளாதார, வர்த்தகக் காரணிகளின் அடிப்படையில் அது மிக மிக முக்கியமானது.
சீனாவுக்கு நீங்கள் பொழுதுபோக்குப் பயணம் செல்வதற்கு சீன மொழி தெரிந்திருப்பது முக்கியமானதாகும். உங்கள் பயணத்தை பொழுதுபோக்காக நீங்கள் மாற்ற விரும்பினால், இந்த மொழியைக் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் சீன மொழியில் புரிந்துகொண்டு மற்றோருடன் உரையாட முடிந்தால், வெற்றிகரமான பயணங்கள், வர்த்தகங்களை உங்களால் செய்ய முடியும்.
சீன மொழியைக் கற்க உங்களை ஈர்க்கும் மற்றைய விஷயம், அது மிகவும் பழமையான கலாச்சாரமாகும். இந்த மொழியை நன்கு கற்றுக் கொள்வதன் மூலம், மிகப் பழமையான இலக்கியங்களைக் கற்கவும், ஆராயவும் இது உங்களுக்குப் பெரிதும் உதவுகிறது. மாணவர்களின் மொழித் திறனை மேம்படுத்தும் வகையில், சீன மொழி வகுப்புகள் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்றன.
சீன மொழியைக் கற்றுக்கொள்வது அதிக வணிக வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கச் சிறந்த வழியாகும். சீன மொழியைக் கற்றுக் கொள்வது, எமது மொழி விருத்தியை மேலும் உயர்த்தும்.
சீன மொழி பல பாகங்களில் பேசப்படுகின்றது என்பது உண்மையே. எனவே, நீங்கள் வணிக உலகில் வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் சீன மொழியை இரண்டாவது மொழியாகக் கற்க முயற்சி எடுக்க வேண்டும். ஹாலிவுட் உட்பட உலகெங்கிலும் உள்ள பல வியாபாரங்கள், வர்த்தகங்களில் சீனர்கள் ஈடுபட்டுள்ளனர். நீங்கள் சீன மொழியில் உரையாடினால், வர்த்தகத்தின் மிகப்பெரிய பங்கை அணுகுவது மிகவும் எளிதாக அமையும்.
சீன மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம், சீன மக்களுடன் தொடர்பு கொள்வது, உரையாடுவது உங்களுக்கு மிக எளிதாக இருக்கும். சீன மொழியானது உலகின் மிகப்பெரிய மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. வர்த்தக உலகில் அதன் ஆதிக்கம் அதிகரிப்பதால், சீன மொழி தற்போது உலகளவில் ஒரு முக்கிய மொழியாகக் காணப்படுகின்றது.
பீஜிங்கிலிருந்து இலங்கை வரை இந்த மொழியைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். நீங்கள் சீன மக்களுடன் வர்த்தகம் செய்கின்றீர்கள் என்றால், உங்களால் சீன மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் வர்த்தக உடன்படிக்கையைப் புரிந்துகொள்வது சாத்தியமில்லை. சீன மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் முழு உலகத்தையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.