சதொசவில் அப்பியாசக் கொப்பிகள் குறைந்த விலையில்..! முழுவிபரம்

பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்க, கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளை சதொச விற்பனை நிலையங்களிலிருந்து வாங்கிக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தரமான அப்பியாசக் கொப்பிகள் நாடு முழுவதும் உள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக தற்போது விநியோகம் செய்யப்படுகின்றது.

எனவே தேவையானவர்கள் சதோச விற்பனை நிலையங்களுக்குச் சென்று 30% கழிவில் அப்பியாசக் கொப்பிகளைக் கொள்வனவு செய்ய முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Polish 20230319 221923870

Join Our WhatsApp Group: Click here