Free Online Course (Programming)

Introduction to Arduino & Programming – Free Online Course 

(இலவச கற்கைநெறி)

Arduino & Programming

  •  Free Course
  •  Online Application
  •  No Age limit 
  •  Duration: 05 Months
  •  Medium: Tamil / Sinhala
  •  Conducted by: American Corner – Kandy

 

அமெரிக்கன் கார்னர் – கண்டி (American Corner – Kandy) நடாத்தும் முற்றிலும் இலவசமான கற்கைநெறி!

  •  கட்டணம்: இலவசம்
  •  காலம்: ஐந்து மாதங்கள்
  •  மொழி மூலம்: தமிழ்/சிங்களம்
  •  கற்கைநெறி ஆரம்பம்: நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக இது தொடர்பில் அறிவிக்கப்படும்.

 

இந்தப் பாடத்திட்டத்தில் கலந்து கொள்ள எதிர்பார்க்கப்படுவோர் யாவர்?

கணினி தொழில்நுட்பம் (Information Technology) தொடர்பான எளிய அறிவினைக் கொண்டிருக்கின்ற பாடசாலை ஆசிரியர்கள் அனைவரும் இதற்காக விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, தரம் – 12 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும். அத்துடன், ஆர்வமுள்ள அனைவரும் இதற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.

இப்பாடநெறிக்கு நீங்கள் விண்ணப்பிக்க உங்களுக்கு ப்ரோகிராமிங் (Programming) தொடர்பான அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தப் பாடத்திட்டமானது பல்கலைக்கழக பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கணினிப் பட்டதாரிகள் போன்றோரினால் உருவாக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பாடத்திட்டத்தின் முடிவில் நீங்கள் பெற்றுக் கொள்ளப் போவது யாது?

1. கணினி தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை அறிவினை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அத்துடன், ப்ரோகிராமிங் (Programming) என்றால் என்ன என்பது பற்றிய விளக்கம் உங்களுக்குக் கிடைக்கும்.

2. நீங்கள் அன்றாட வாழ்வில் எதிர் நோக்குகின்ற சவால்கள், பிரச்சினைகளுக்கு புரோகிராமிங் (Programming) மூலமாகத் தீர்வு காண முடியும்.
  1. இதன் ஊடாக பல்வேறுபட்ட தொழில்நுட்பங்கள் பற்றி நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.

  2. இலத்திரனியல் சுற்றுக்களை உருவாக்குவதன் மூலம் ரோபோ இயந்திரங்கள், மோட்டார் போன்றவற்றை செயற்படுத்துவது தொடர்பிலான செயல் திட்டங்களை உங்களால் முன்னெடுக்க முடியும்.

 

இப்பாடநெறியை உங்கள் வசதிக்கேற்ற வகையில் நீங்கள் தமிழ் அல்லது சிங்கள மொழியில் கற்றுக் கொள்ளலாம்.

இப்பாடநெறி நிறைய  Zoom செயலி மூலமாக நிகழ்நிலையிலேயே நடைபெறும். ஆகவே Zoom செயலி உங்கள் கணினியில் அல்லது கைத்தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.

இப்பாடநெறியானது, ஐந்து மாதங்கள்  இடம்பெறும்.

 

இப்பாடத்திட்டத்தில் பங்கு கொள்பவர்கள் பின்வருவனவற்றை கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

  • கைத்தொலைபேசி அல்லது கணினி
  • Zoom செயலி
  • வாட்ஸ்அப் (கட்டாயமல்ல)
  • சீரான இணையத் தொடர்பு

உங்களிடம் கணினி வசதிகள் இல்லாமல் இருப்பின், வாரத்துக்கு ஒரு முறை அப்பியாசங்களைச் செய்து கொள்ள இணையத் தொடர்புடன் கூடிய கணினி மற்றும் கைத்தொலைபேசி இருக்க வேண்டியது சிறந்ததாகும்.

இது முற்றிலும் ஒரு இலவசமான பாடநெறி என்பதுடன் முதலில் விண்ணப்பிக்கின்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இப்பாடநெறி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மீண்டும் புதிதாக யாரும் இப்பாடநெறிக்கு இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள். நீங்கள் இப்பாடநெறிக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் அனைத்துத் தகவல்களும் உண்மையானதாகவும் சரியானதாகவும் இருத்தல் மிகவும் முக்கியமானதாகும்.

தெரிவு செய்யப்படுகின்ற விண்ணப்பதாரிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக பாடநெறி தொடர்பான அனைத்து விடயங்களும் வழங்கப்படும்.

 

நீங்கள் இப்பாடநெறிக்கு கீழே உள்ள லிங்கினைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.  

APPLICATION LINK: 

CLICK HERE

(click here என்பதை கிளிக் செய்யவும்.)

 

 

 

 

ப்ரோக்ராமிங் (Programming) பற்றி நீங்கள் அறிய வேண்டிய சில தகவல்கள்

ப்ரோக்ராமிங் (Programming) என்பது நம்மில் பலர் அறிந்திருக்காத ஒரு விடயமாகும். கணினி பயன்படுத்துபவர்களே அதிகம் இந்த வார்த்தையை உச்சரிப்பதை நீங்கள் காணலாம். அதாவது ப்ரோக்ராம் (Program) என்பது தமிழில் ஆணைத் தொடர் அல்லது கட்டளை பட்டியல் அல்லது நிரல் என்றும் சொல்லலாம். அதாவது ப்ரோக்ராமிங் ஆனது, ஒரு கணிப்பொறியின் நடத்தையை அல்லது செயலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

இலகுவாக சொல்லப்போனால், ப்ரோகிராமிங் (Programming) என்பது ஒரு கணினி என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நாங்கள் குறிப்புகளாக Programming language இல், அதற்குப் புரிகின்ற மாதிரி எழுதி, ஒரு சிறந்த முடிவைப் பெறுகின்ற ஒரு கலையாகும்.

இந்த ஆணைகளை (Program) எழுதுபவர்களை நாங்கள் ப்ரோக்ராமர் (Programmer) என்று அழைப்போம். இன்று ப்ரோக்ராம் எழுதுபவர்கள், இந்த நவீன உலகத்தில் அதிக சம்பளம் பெறுகின்றார்கள்.

இதனைப் படிப்பதற்கு நீங்கள் புத்தகங்களைக் கற்றாலும் சரி, அல்லது இணையத்தளங்களில் தேடினாலும் சரி, அவை உங்களுக்கு சற்று கடினமானவையாகத் தோன்றினாலும் உண்மையில் ப்ரோக்ராமிங் என்பது கடினமான ஒன்றல்ல.

உதாரணமாக சொல்லப்போனால், சில கொடுக்கப்பட்ட பிரச்சனைகளை நீங்கள் உள்வாங்கிக் கொண்டு எவ்வாறு தீர்வு காண வேண்டும் என்கின்ற சிந்தனை உங்களிடம் இருந்தால், நீங்கள் இலகுவாக ஒரு ப்ரோக்ராமர் (Programmer) ஆகிவிட முடியும்.

இவ்வாறான கற்கைநெறிகள் ஆங்கிலத்திலேயே நடாத்தப்படுகின்றன. தற்பொழுது நமது தாய்மொழியில் (தமிழ் மற்றும் சிங்களத்தில்) நடாத்தப்படுவதனால், எங்களால் இலகுவாக இதனைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான கற்கைநெறிக்கு பலரும் அதிக பணம் செலவழித்துக் கற்கின்றார்கள். ஆனால் தற்பொழுது இவ்வாறான கற்கைநெறிகள் இலவசமாகவும் நடாத்தப்படுகின்றது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை உங்களுக்கு தற்போது அமெரிக்கன் கார்னர் –  கண்டி வழங்குகின்றது. இதன் மூலம் நீங்கள் உங்களை ஒரு சிறந்த ப்ரோகிராமாக உருவாக்கிக் கொள்ள முடியும். முற்றிலும் இலவசமான இக்கற்கைநெறிக்குப் பதிவு செய்து உங்களுடைய எதிர்கால கனவை நனவாக்கும் அடித்தளத்தை ஆரம்பியுங்கள்.

ஆகவே இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள். எதிர்காலத்தில் சிறந்த ப்ரோக்ராம் ஆக நீங்கள் வருவதற்கு எங்களது வாழ்த்துக்கள். இதனை ஏனையோருக்கும் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *