இந்த மாதம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக, 5,000/- ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன் மிகுதி ரூபா 5000/- ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படவுள்ளது . நிலுவைத் தொகையானது 2025 ஜனவரி முதல் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் என்றும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group – Click here