ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள புதிய நடைமுறை

FB IMG 1669354068358 1

இனி வரும் காலத்தில் தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தில் நான்கு வருட காலம் பட்டதாரி மற்றும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு கற்பித்தலுக்காக அனுப்பப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜெயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்பின்னர் ஆசிரியர் தொழிலுக்கு ஆட்களை இணைத்துக் கொள்வது மாற்று முறையிலாகும். அந்தத் திட்டத்தின் முக்கிய செயற்பாடாக 19 கல்வியல் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இதில் 4 வருட காலம் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரிய பயிற்சியை பெற்ற பின்னரே பாடசாலைகளுக்கு கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் அனுப்பப்படுவர். இதன் மூலம் செயல்திறன் மிக்க சிறப்பான ஆசிரியர்கள் உருவாக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வித்துறையில் சிறந்து விளங்கும் பிரிட்டன், பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இத்தகைய நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. சிவில் சேவையை விட ஆசிரியர் சேவைக்கு நியமிக்கப்படுவது அங்கு மிகப்பெறும் கௌரவமாக காணப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.