ஆசிரியர் சேவையில் 8,000 டிப்ளோமாதாரிகளை இணைக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 8,000 பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக, வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளில் இவர்களை சேவையில் அமர்த்தவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் உள்ளிட்ட பல பாடங்களுக்கு, பல பாடசாலைகளில் வெற்றிடங்கள் உள்ளதாகவும், எதிர்வரும் பாடசாலைத் தவணைக்கு முன்னர், இவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.