உலக சமாதான தின கட்டுரை போட்டியில் பங்கு பெற்று உங்கள் கருத்துக்களை உலகறிய செய்யும் வாய்ப்பு
இந்த உலக சமாதான தினத்தில் “சமாதானம் எனும் கலாச்சாரத்தை விதைப்போம்” எனும் தொனிப்பொருளிலான கட்டுரை போட்டியை உங்களிடத்தில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
சமாதானம் பற்றிய உமது தனித்துவமான எண்ணங்கள் , மதங்களுக்கு இடையான ஒற்றுமை, காலநிலை மாற்றம், மற்றும் சமூக கருப்பொருட்கள் என்பன பற்றிய உமது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றோம்.
எவ்வாறு பங்கு பெறுவது?
1. கருப்பொருள் – “சமாதானம் எனும் கலாச்சாரத்தை விதைப்போம்” எனும் தொனிப்பொருலில் கட்டுரை வரைதல்.
2. 2000 சொற்கள்.
3. ஏற்றுக்கொள்ளப்படும் மொழிகள் – தமிழ், ஆங்கிலம், சிங்களம்
4. சமர்ப்பிக்க முடியுமான இறுதி நாள் – செப்டம்பர் 16,2024
5. சமர்ப்பிக்கும் முறை- வழங்கப்பட்டுள்ள google form மூலமாக சமர்ப்பிக்கலாம். மின்னஞ்சல் மூலமான சமர்ப்பிப்பு ஏற்றுக்கொள்ளப்படாது.
பரிசுகள் –
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் போட்டியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வெற்றி பெறும் கட்டுரைகள் எங்களுடைய blog பக்கத்தில் பதிவிடப்படும். மற்றும் உலக சமாதான தினத்திற்கான விஷேட e Magazine இலும் பதிவிடப்படும்.
தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் எங்களுடைய சமூக வலைத்தல பக்கத்திலும் பதிவிடப்படும்.