18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை இம்மாதம் நிறைவுக்குக் கொண்டு வருமாறு தேர்தல் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர், இது தொடர்பான பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது வீட்டில் உள்ளவர்களின் விபரங்கள், வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கேற்ப, நிரந்தர வதிவிடத்தை மாற்றாதவர்கள், திருமணம் மற்றும் கல்வி / வேறு காரணங்களுக்காக வசிப்பிடத்தை மாற்றியவர்கள் அனைவரும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாவிட்டாலும், அவர்களின் பெயர்களும் வாக்காளர் இடாப்பில் இடம்பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

JOIN OUR WHATSAPP CHANNEL: FOLLOW